
தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது; இது புயலாக மாற வாய்ப்பு இல்லை.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று மேற்கு திசையில் நகர துவங்கும்-. இதனால் நவ.20 மற்றும் 21-ம் தேதிகளில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும்.
மேலும் நாளை முதல் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.