தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் ஆளுமை கொண்டவர் ஜெயலலிதா !! எதிர்க்கட்சிகள் ஒப்புதல் !!

 

எதிர்க்கட்சி தலைவர்களிடம் செய்தியாளர்கள் எந்த ஒரு கேள்வியை கேட்டாலும், இதே கேள்வியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நீங்கள் கேட்க முடியுமா என எதிர் கேள்வி கேட்கிறார்கள்.

இதன்மூலம் ஓர் உண்மை தெளிவாக தெரிய வருகிறது.

அது, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தி, ஆளுமை ஜெயலலிதாதான் என்பதுதான்.

இதை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அப்படிதான் நினைக்க தோன்றுகிறது.

உண்மையிலேயே, தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தி ஜெயலலிதாதான்.

இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை.

கனமழை, வெள்ளத்திற்கு பிறகு, அதிமுகவின் செல்வாக்கு வெகுவாக குறைந்தபோது, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை தனியாக எதிர்த்து நிற்க திமுகவிற்கு இன்னும் துணிச்சல் வரவில்லை.

தேமுதிக போன்ற கட்சிகளின் தயவை நாடி திமுக சென்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டணியில் சேர வருமாறு விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.

இதன்மூலம், அதிமுகவை தனித்து சந்திக்க முடியாது என்பது அவருக்கு தெரிகிறது.

அந்த கிலியில்தான், கூட்டணியில் சேர வாருங்கள் என ஒவ்வொரு கட்சியையும் கூவி கூவி அழைக்கிறது திமுக.

இப்படிப்பட்ட நிலையில், இன்று (31.12.2015) கூடும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து அனைவரும் வியக்கும் வகையில் ஜெயலலிதா துணிச்சலான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆளும் கட்சி மீது பல்வேறு புகார்கள் இருந்தும், தேர்தலை துணிச்சலுடன் சந்திக்கும் மனநிலை, தைரியம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே இருக்கிறது.

எந்த ஒரு கட்சியையும், கூட்டணியில் சேர வாருங்கள் என இதுவரை அதிமுக அழைக்கவில்லை.

இனியும் அழைக்காது என்றே தெரிகிறது.

அந்த அரசியல் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.

அதனால்தான், தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக, ஆளுமை கொண்டவராக அவர் கருதப்படுகிறார்.  இனியும் கருதப்படுவார்.

 

எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்,
பத்திரிகையாளர்.