ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் இடம்பெறும் ‘எந்திர லோகத்து சுந்தரியே’ என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
லைக்கா நிறுவனம் பிரமாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் ‘2.0′ படத்தில் ஜோடியாக எமி ஜாக்சன், வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இப் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெறும் ‘எந்திர லோகத்து சுந்தரியே’ என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.