பெண்களிடம் அவதூறு பேச்சு தனியார் நிறுவனத்தில் பெண்கள் முற்றுகை

பாவூர்சத்திரம் அருகே அவதூறாக பேசும் ஊழியரை மாற்றக்கோரி பீடிக்கடையை பெண்கள்  முற்றுகையிட்டனர்.
பாவூர்சத்திரம் அருகே மலையராமபுரத்தில் தனியார் பீடி நிறுவனம் உள்ளது. இங்கு இப்பகுதி பெண்கள் இலை, தூள் வாங்கி  பீடி சுற்றி கொடுத்து வந்தனர். இந்நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த நிறுவன ஊழியர் ஒருவர் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் வேண்டதகாக வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண்கள் நிறுவன ஊழியரை உடனடியாக மாற்றுக்கோரி பீடிக்கடையை முற்றுகையிட்டனர்.
சம்பவம் அறிந்து பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையில் போலீசார் விரைந்து முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பீடிக்கடையை நிர்வாகிகளை தொடர்புகொண்டு பிரச்சனைக்குரிய ஊழியரை இடம் மாற்ற செய்திட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து முற்றுகையிட்ட பெண்கள் கலைந்துசென்றனர்.
பெண்களின் திடீர் முற்றுகையால் இப்பகுதியில்  பரபரப்பு ஏற்றப்பட்டது