மேட் இன் அம்மா நாடு ஸ்டிக்கர் ஒட்டப்படும்: கருணாநிதி டிவிட்

சென்னை:
அதிமுக., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், இப்போதே திமுக., தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் அதிமுக., ஆட்சிக்கு வந்தால், மேட் இன் அம்மா நாடு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவுகள்:

தப்பித் தவறி 2016ஆம் ஆண்டு தேர்தலில், ADMK ஆட்சிக்கு வந்தால் “ஜெயலலிதா ஸ்டிக்கர்” Made in “அம்மா நாடு” என்று உலகப் புகழும் பெற்று விடும்.
2016ல் ADMK ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து அவர்கள் முதுகிலே ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவார்கள்!
தப்பித் தவறி 2016ஆம் ஆண்டு admk ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்று இப்போதுள்ள பெயரையும் மாற்றி “அம்மா நாடு” என்று வைத்து விடுவார்கள்