ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : எச். ராஜா

 
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்துள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில், பங்கேற்க வந்த எச். ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:- :
காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது வேண்டுமென்றே ஜல்லிக்கட்டை குழிதோண்டு புதைக்கும் தீயநோக்கத்துடன் காளைகளை காட்சிப்படுத்து தல் பட்டியலில் சேர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைபெறப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்து மத்திய அரசு இனிப்பான செய்தியை தந்திருக்கிறது.
ஆனால் மோடி அரசோ மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று பெரும்முயற்சி மேற்கொண்டது. கடந்த 2014 ஆம் ஆண் டில் பாஜக தலைவரான அமித்ஷா சென்னைக்கு வந்திருந்தபோது,சிவகங்கைமாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்களின் 600 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் கையெழுத்திட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று அதன் ஆதரவாளர்களுடன் அமித்ஷா விடம் மனுகொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்தவேண்டும் என்ற பொறுப்பை அமித்ஷா என்னிடம் வழங்கினார். அதனால் நானும் உடனே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரசாத்ஜவடேகருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு அமைச்சரும் உறுதியாக ஜல்லிக்கட்டு வரும் ஆண்டில் அனுமதி வழங்கப்படும் என்று பதில் கடிதம் அனுப்பினார்.
இருப்பினும் சில சிக்கல்கள் தொடர்ந் ததால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அமைச்சர் ஜல்லிக்கட்டுக்கு பாரம்பரியமான அடையாளங்கள் குறித்துகேட்டார். அதற்கு தமிழ் இலக்கியங்களில், மகாபாரத்தில் எருது தழுவுதல், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என்ற பல்வேறு பெயர்களில் மாடுபிடி பந்தயங்கள் உள்ளதை ஆதாரத்தோடு விளக்கம் தரப்பட்டது. ஜல்லிக்கட்டை வைத்து சிலரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தப்படும் என்றெல்லாம அறிவித்தது வருகின்ற நேரத்தில் இந்தப்போராட்டத்தை வேறு எதற்கா வது வைத்துக்கொள்ளட்டும் என்றே மோடி அரசு ஜல்லிக்கட்டுக்கு இப்போது அனுமதி தந்திருக்கிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறிய ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்றால் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்வாரா? என்றதற்கு தற்போது நான் கேட்டுக்கொள்வதெல்லாம் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதிதரப்பட்டுவிட்டது என்பதால் இளங்கோவன் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்பதே. அதுதான் கெளரவமானதும், நியாயமானதுமாக இருக்கும். ஜல்லிக்கட்டுக்கு மாடுதுன்புறுத்தப்படுகிறது என்கிற சில அமைப்பினரும், தி.க வீரமணி போன்றோரும் தெரிவிக்கின்றனர்.
மாட்டுக்கறி விருந்து நடத்திய வீரமணி அந்த மாடு தற்கொலை செய்துகொண்ட பின்னரா கறிவிருந்து வைத்தார்?. மாடு எப்படி கொடூரமாக கொல்லப்படுகிறது.எனவே மாடு துன்புறுத்தல்,மிருகவதை போன்ற வாதங்கள் எல்லாம் போலியானது. தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று நீதிமன்ற வழக்குக்குக்கு போகிறார்கள். ஆனால் ஜனவரி 1 புத்தாண்டில் வெடிவெடிக்கூடாது யாராவது வழக்குத் தொடுத்தார்களா?. ஆக கிறிஸ்துவ அமைப்புகள் சிலர் மக்கள் விரோத அரசியல் கட்சி யினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் ஜல்லிக் கட்டு, மஞ்சுவிரட்டு, எருது தழுவுதல், தட்டுவண்டிப்பந்தயம் என்று வெகு விமர்சை யாக நடத்தப்படுகிறது. அதற்கு ஏதுவாக அரசாணை பிறப்பித்த பிரதமர் மோடி, சுற்றுச் சூழல் அமைச்சர் ஆகியோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவிததுக்கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு இது தற்காலிக அனுமதி என்று கருதவேண்டிய அவசியமில்லை. அரசாணையில் முழுமையான விவரங்கள் தரப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமான அனுமதிதான்என்று எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.