சர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார்! உரிமை உண்டு என்கிறார் நீதிபதி!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
sarkar banner - 2026

சர்க்கார் பட வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.

அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் படத்தை பார்த்துள்ள நிலையில், விரோதத்தை தூண்டியதாக எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வன்முறையை தூண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தால், அவற்றை அனுமதித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், திரைப்படத்தை, திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும்  என்று அரசுத் தரப்புக்கு அறிவுரை கூறினர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.