திமுகவினர் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் பரபரப்பு

 
திமுகவினர் இருதரப்பினருக்கிடையே உருவான கோஷ்டி மோதலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு நிலவிவியது.
திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர் சிவாவின் பெயர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி சிவாவின் மகன் சூர்யாவின் ஆதரவாளர்கள், முன்னாள் தமிழக அமைச்சர் நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் நேருவின் ஆதரவாளர்கள், கன்டோன்மெண்ட் பகுதியில் உள்ள சிவாவின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அங்கிருந்த சிவாவின் பேனர்களை நேருவின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர். இதன்காரணமாக, இருதரப்பினருக்கிடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவியது.