
பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களைப் பற்றி தரக்குறைவாகவும், இரு பெரும் ஹிந்து சமயங்களான வைணவ, சைவ சமயங்களை கொச்சைப்படுத்தி இழிவாகவும் பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியைக் கைது செய்ய வலியூறுத்தி, தமிழக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இன்னொரு நிகழ்ச்சியாக, திமுக அமைச்சர் பொன்மொடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக மகளிரணி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார்.
திமுகவின் வனத்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில், விலைமாதர்களை சைவம் வைணவம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை, திமுகவின் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அமைச்சர் பொன் முடியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவது ஏற்புடையதல்ல,
அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக மகளிர் அணி சார்பாக முன்னாள் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை செல்லூர் 60 ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில், அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.