நானும் தமிழன்தான்; ஜல்லிக்கட்டு காளையை அடக்க விரும்புகிறேன்: மார்கண்டேய கட்ஜு

புதுதில்லி :

முற்பிறவியில் நானும் ஒரு தமிழனாகத்தான் பிறந்திருப்பேன்; நானும் தமிழன் தான், ஜல்லிக்கட்டு காளையை அடக்க நான் விரும்புகிறேன் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

 

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மார்க்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மத்திய அரசு அனுமதிக்காவிட்டாலும் மாநில அரசு ஜல்லிக்கட்டினை சிறப்பு சட்டம் மூலம் நடத்தலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டு என்று தெரிவித்திருந்த கட்ஜு, ஜல்லிக்கட்டு மீதான தடை விலக்கப்பட்டு, இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த வழி ஏற்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கங்களில் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள கருத்துகள்…

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதில் எந்த வித சட்டவிரோதமும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

 

நானும் ஒரு தமிழன் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ள கட்ஜு, தமிழ் என் மூச்சு என்றும் பதிவு செய்துள்ளார்.

 

 

இப்பொழுதும் நான் நன்றாக தமிழ் பேசுகின்றேன். முற்பிறவியில் நான் தமிழனாகத்தான் பிறந்திருப்பேன் என்று நினைக்கின்றேன். அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அப்போது நான் மீண்டும் தமிழனாகப் பிறந்து காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.