“அம்மா” தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி “அம்மா” தான்! : மருத்துவர் சேதுராமன்

 
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி “அம்மா” தான்! என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் கூறியுள்ளார்.
 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நடேசகுணசேகர திருமண மண்டபத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று (10-01-2016) அதன் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.அந்த கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர், மாநிலப் பொருளாளர் எம்.கே.செந்தில் முன்னிலை வகித்தனர். நடை பெற்ற கூட்டத்தில் 896 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில் ஒன்பது பொது தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாவது :-
 
முதல்வர் பதவிக்குஆசைப்பட்டு எத்தனை பேர் அலைந்தாலும், தமிழகத்தில் மீண்டும் முதல்வராகப் போவது புரட்சித் தலைவி தான். எதிர்க்கட்சிகள் புரட்சித் தலைவி அம்மாவுக்கு எதிராக எத்தனை சக்ரவீயூகங்கள் அமைத்தாலும் நிரந்தர முதல்வர் “அம்மா” தான் – 2016 தேர்தலில் தமிழக மக்கள் எழுதப்போகும் இந்த தீர்ப்பை யாராலும் மாற்றி எழுத முடியாது.“மக்களால் நான் மக்களுக்காக நான்” என்று சொல்லி ஆட்சி நடத்தும் “அம்மா” வேண்டுமா? இல்லை மகனை முதல்வராக்க ஆசைப்படும் கருணாநிதி வேண்டுமா? என்று கேட்டால் தமிழக மக்கள் உச்சரிப்பது “அம்மா” பெயரைத்தான்.
 
மற்ற கட்சிகள் சில முதல்வர் ஆசையில் திரிகின்றன இவர்கள் எல்லாம் விட்டில் பூச்சிகள், இந்த மின்மினி மேனாக்கிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கப் போவது இல்லை புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் கூட்டணியில் தான் நமது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பத்தாண்டுகாலமாக தொடர்ந்து இருக்கிறது. இந்த முறை நமக்கு அங்கீகாரம் தரும் அளவுக்கு “அம்மா” கூடுதலாக தொகுதிகளைத் தருவார். அப்படி அவர் தந்து விடக்கூடாது என்தற்காக சில குள்ளநரிகள் நமக்கு எதிராக பல பொய்ப்புகார்களை ஊரெல்லாம் உளறிக்கொண்டு திரிகிறார்கள்.
 
“டாக்டர் சேதுராமன் யார்” என்று புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்கு தெரியும் பதவி ஆசைக்காக அலைபவன் இல்லை நான். பசும்பொன் தேவர் கொள்கைகளை லட்சியமாகக்கொண்டு நாம் செயல்படுகிறோம். புற்றீசல் போல நம் சமுதாய ஒற்றுமையைக் கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்.
அத்தனை சதிகளையும் முறியடித்து மூவேந்தர் முன்னணிக் கழகம் புரட்சித் தலைவி “அம்மா”வின்ஆதரவோடு சட்டமன்றத்துக்குள் இந்த முறை நிச்சயம் செல்லும் மூன்று தொகுதியோ, ஐந்து தொகுதியோ எத்தனை தொகுதி என்பதை புரட்சித் தலைவி அம்மா தருகிறாரோ அதனைப் பெற நாம் தயார். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை மக்களிடம் சொல்ல தமிழக முழுவதும் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்று மருத்துவர் சேதுராமன் பேசினார்.
 
கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது தீர்மானங்களாவது :-
 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக சட்ட விதி பிரிவு 9ன் படி கூட்டப்பட்டுள்ள மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 11-10 2015, அன்று நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விதி எண் 10 /பிரிவு 4ன் படி மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.ஆர். தேவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும்,பிரிவு -5ன் படி மாநில இணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்புக்கு இரா.பிரபு என்கிற ஆர்.பிரபாகரன், .வி.டி.பாண்டியன், பெ.கழுவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும், பிரிவு – 6ன் படி மாநிலப் பொருளாளர் பொறுப்புக்கு எம்.கே.செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் இந்தப் பொதுக்குழு ஒருமித்த கருத்துடன் ஏற்று புதிய நிர்வாகிகளை அங்கீகாரம் செய்தது.
 
கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா சுனாமி தாக்கிய போது தமிழக போர்க்கால நடவடிக்கை எடுத்தாரோ, அதை விட மூன்று மடங்கு வேகத்தில் செயல்பட்டு பல்லாயிரம் உயிர்களை காப்பாற்ற விரைவு நடவடிக்கை செததோடு, 30 இலட்சம் பேருக்கு நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி லஞ்ச லாவண்யமில்லாத அரசு புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான அரசு என்பதை மீண்டும் உணர்த்தியதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு பாராட்டி, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மழை வெள்ளப் பாதிப்பு அடைந்த சென்னை மாநகரப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக சென்னை மண்டல நிர்வாகிகள் இணைப் பொதுச்செயலாளர் ஆர்.பிரபாகரன்,சென்னை மண்டல தலைவர் எஸ்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, சென்னை மண்டல செயலாளர், பி.பெரியதுரை, மாவட்ட நிர்வாகிகள் ஜாக்குவார்நாதன், பி.ஆர்.சி.பாண்டியன், ந.பழனிவேல், து.சண்முகவேல் பாண்டியன், சேப்பாக்கம் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், நிவாரணப் பொருட்களாக ஐந்து லட்சம் மதிப்பில் ஆடைகள், பிஸ்கட், குடிநீர் வழங்கிய மாநிலப் பொருளாளர் எம்.கே.செந்தில் அவர்களுக்கும், நிவாரணப் பொருட்களாக ஒரு இலட்சம்மதிப்பில் ஆடைகள், உணவு பொருட்கள் வழங்கிய இணைப் பொதுச்செயலாளர் வி.டி.பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், இளைஞரணிச்செயலாளர் அருண்பாண்டியன் ஆகியோருக்கும், 45 நாட்களுக்கும் மேலாக தலைநகர் சென்னையிலே முகாமிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தொடர்ந்து இலவசமருத்துவ முகாம் நடத்தி, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து பொருட்கள், நாப்கின், கொசுவலை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வாரி வழங்கிய கழக நிறுவனர் தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்களுக்கும், மருத்துவப் பணியாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்ந்த 15 டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவிற்கும் இந்தப் பொதுக்குழு பாராட்டுதலையும், நன்றிதனையும் தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெறாமல் சிலர் தடுத்த போது எந்த வித நடவடிக்கையும் எடுக்காது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகித்த தி.மு.கவும் இப்போது ஜல்லிக்கட்டு நிகழ்வில் இரட்டை வேட அரசியல் நடத்தியது, இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஐனதா அரசு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் கோரிக்கையையும், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் போராட்டத்தையும் உணர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிற்கு அனுமதி தந்துள்ளதற்கு இந்தப் பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தஞ்சை சரபோஜி மன்னரால் 200 ஆண்டுகளுக்கு முன்பாக பேராவூரணி தொகுதி மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட ”மனோரா” எட்டு அடுக்கு கோபுரம் தமிழக தொழில் நுட்பம் கலந்து ஆங்கிலேய கலை வடிவத்தின் சின்னமாக திழ்கிறது. தமிழ், தெலுங்கு,மராட்டி, உருது, ஆங்கிலம் கல்வெட்டுகளுடன் திகழும் “மனோரா” கோபுரத்தை தேசிய சுற்றுலாத் தலமாக மத்திய அரசு அறிவிப்பதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க மல்லிப்பட்டினம்துறைமுகத்தை மேம்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிச் சீரமைக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 
தஞ்சை – பட்டுக்கோட்டை இடையே தடை பட்டு நிற்கும் ரயில் போக்குவரத்து, நிறுத்தப்பட்ட – காரைக்குடி – பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி – சென்னை இடையேயான இரயில் சேவை அகல இரயில் பாதையாக சீரமைக்கும் திட்டங்களுக்கு கடந்த காலங்களில் தடையாக நின்ற தி.மு.கவை இந்தப் பொதுக்குழு கண்டிப்பதோடு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள இரயில்வே நிதி நிலை அறிக்கையில் நிலுவையிலுள்ள தஞ்சைப் பகுதி ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை இரயில்வே அமைச்சகம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் நடத்திடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதி மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படை இடையூறு செய்து வருகிறது. இந்தப் பகுதியில் சர்வதேச கடல் எல்லை வரையறை செய்வதில் மத்திய அரசு தாமதம் செடீநுது வருவதால் தான் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதோடு, படகு மீன்பிடி வலைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இலங்கையின் இந்த சர்வாதிகார செயலை கண்டு கொள்ளாமல் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தாது தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பேராவூரணியில் அரசு கலைக்கல்லுhரி அமைத்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவை பாராட்டுவதோடு, பேராவூரணிப் பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் இருப்பதால் கொப்பரை தேங்காய் கொள்முதல் வளாக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராவூரணிப் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிட அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் முன்னின்று செயல்படும் என்பதை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது என கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
நடைபெற உள்ள 2016- சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து தான் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்போட்டியிடும். 10 ஆண்டுகளாக நாம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் தலைமையிலானகூட்டணியில் தான் தொடர்ந்து நீடித்து வருகிறோம். அதில் இன்று வரை நாம் பின்வாங்கவில்லை.2011 நடந்த பொதுத் தேர்தலில் நமக்கு போட்டியிட வாய்ப்பளித்த புரட்சித் தலைவி அம்மா இந்த முறை நமக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்குவார் என நம்புகிறோம். ஆனால் நம்மை வளரவிடாமல் தடுக்கிற முயற்சியாக புரட்சித் தலைவி “அம்மா” அவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கிற முகமாக சில சுயநல சக்திகள் பொய்யான கட்டுக்கதைகளை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதனை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறுவது, வேட்பாளர்கள் தேர்வு செய்வது போன்ற தேர்தல் பணிகளில் கழக நிறுவனர் தலைவருக்கு இந்தப் பொதுக்குழு முழு அதிகாரம் அளிக்கிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகளை தஞ்சை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, இளைஞரணி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் அயப்பன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கே.பி.கருணைக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.