சட்டசபையில் அதிமுகவுக்கு 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இன்று முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய கூட்டத்தில் 105 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்கள், முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்துள்ளனர். ஆனாலும்
முதல்வர் எடப்பாடியார் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் இதுவரை உத்தரவிடவில்லை.
தற்போது தினகரன் அணியில் 25 எம்.எல்.ஏக்கள் இருப்பதால் இவர்களே முதல்வர்
எடப்பாடியார் மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு
உள்ளது. சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 24 எம்.எல்.ஏக்களின்
ஆதரவு தேவை
இவர்கள் அல்லாமல் தற்போது எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட தினகரனின்
ஸ்லீப்பர் செல்களும் கூட நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் நிலையில்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே பெரும்பான்மை இழந்து நெருக்கடிக்குள்ளாகி உள்ளது முதல்வர் எடப்பாடி
அரசு என்பது குறிப்பிடத்தக்கது.



