ப்ளுவேல் கேம் தொடர்பாக மாணவிகளிடம் விழிர்புணர்வு நிகழ்ச்சியை மதுரை மாந்கர
காவல்துறையினர் சார்பில் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக மதுரை சின்ன சொக்கிகுளத்தில் உள்ள லேடி டோக் பெண்கள்
கல்லூரியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது
காவல்துறை ஏ.டி.எஸ்.பி கலாவதி மற்றும் தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர்
அசோகன் உள்ளிட்டோர் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
இனையத்தில் உள்ள தற்கொலையை தூண்டும் விளையாட்டான ப்ளூவேலை யாரும் தரவிரக்கம்
செய்ய வேண்டாம், அப்படி ஒரு வேளை யாரும் அதனை பயன்படுத்தி வந்தால் அது பற்றி
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரிடன் பயமின்றி தெரிவிக்கலாம்
என்றனர்…
இந்நிகழ்வில் கல்லூரியின் மாணவிகள் 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மாணவிகள் ப்ளூவேல் கேமில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலிருந்து எப்படி
தங்களை மீள்வது எப்படி என்பது குறித்து நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். குறிப்பாக மதுரை மொட்டமலையில் தற்கொலை செய்துகொண்ட விக்னேஷ்
எவ்வாறு அந்த முடிவை எடுத்தார் என்றும் அதிலிருந்து தங்களை எளிதாக காப்பது
எப்படி என்றும் மாணவிகள் நடத்திக் காட்டியது அனைத்து மாணவிகளையும் நெகிழச்
செய்தது
இறுதியாக இன்னொரு புளூவேல் இறப்பிற்கு நாங்கள் விட்டுவிட மாட்டோம் என்று
மாணவிகள் சபதம் எடுத்துக்கொண்டனர்.



