நன்னிலம் :
நன்னிலத்தில் அதிமுக அலுவலகம் தங்களுக்கே சொந்தம் என அமைச்சர் காமராஜ் மற்றும்
தினகரன் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.
மேலும் இரு தரப்பினர் இடையே மோதலை தடுக்க டிஎஸ்பி தலைமையில் 50 போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இந்த நிலையில் திருவாரூர் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி இருதரப்பினர்
இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை
தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.



