
வரும் புதன்கிழமை அன்று வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.
இது குறித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அகில பாரத செயலாளர் துரை சங்கர் தெரிவித்தபோது, வரும் டிச.26ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களிலும், ஒவ்வொரு வீடுகளிலும் ஸ்ரீ ஐயப்பனை வேண்டி சரண கோசத்துடன் தீபம் ஏற்றி பிரார்த்திக்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறோம்.
அன்பர்கள் அனைவரும் சபரி மலை பாதுகாப்பு இயக்கத்தில் இணைய வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒன்றிணையும் நேரம் இது. சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து, அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


