தோல்வி பயம்.. டிடிவி.,யைத் தொடர்ந்து ஹெச்.ராஜாவும் ஸ்டாலினுக்கு கேள்வி!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
h raja - 2026

தோல்வி பயத்தினால்தான் திமுக., திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு கோருகிறது என்று நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது பகிரங்கமாகக் கூறினார் அமமுக., து,.பொ.செ., டிடிவி தினகரன்.

தஞ்சையில் தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக.,வுக்கு தோல்வி பயம் என்றும், ஆளூம் கட்சியும் அதனால்தான் புயல் நிவாரணம் என்று காரணம் கூறி, தேர்தலை தள்ளிப் போடப் பார்க்கிறது என்றும் கூறினார்.

இந்நிலையில், இன்று பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜாவும் இதே கேள்வியை ஸ்டாலினுக்குக் கேட்டிருக்கிறார்.

தோல்வி பயத்தால் தேர்தலை ஒத்திவைக்க

அனைத்துக் கட்சி கருத்து கேட்க ஸ்டாலின்

கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலை மு.க.ஸ்டாலின் வரவேற்றிருக்க வேண்டும்… என்று கூறிய ஹெச்.ராஜா, திருவாரூர் தேர்தலுக்கு முன்பே திமுக தோல்வியை ஒப்புக்கொள்கிறாரா திருமாவளவன்? என்று கேள்வியும் எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.