October 12, 2024, 9:58 AM
27.1 C
Chennai

குழந்தை கதறக் கதற தாயை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த கண்டக்டர்

கதற கதற குழந்தையின் கண்முன்னே பெண் பயணியை தாக்கிய அரசுப் பேருந்து நடத்துனர்: வைரலான காணொளி, மகளிர் ஆணையம் விளக்கம் கேட்பு.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பேருந்து நிலையத்தில் 3 வயது குழந்தையின் கண்முன்னே அரசுப்பேருந்து நடத்துனர்  பெண் பயணியை தாக்கும் காணொளி வைரலாகி வருகிறது.

இன்று காலைமுதல் ஒரு காணொளி வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. அதில் பேருந்து நிலையம் ஒன்றில் சுற்றிலும் பயணிகள் வேடிக்கைப் பார்க்க, பேருந்தைவிட்டு 3 வயது பெண் குழந்தையுடன் இறக்கப்பட்ட கிராமத்துப் பெண் பயணி ஒருவர் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பதிலுக்கு நடத்துனர் அவரை மிரட்டும் தொனியில் திட்டுகிறார்.

இதைப்பார்த்து பயந்துப்போன பெண் பயணியின் குழந்தை பயத்துடன் தாயின் கையைப்பிடித்து வாம்மா போகலாம் என இழுக்கிறது. பெண் பயணி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நேரம் திடீரென நடத்துனர் அந்த பெண் பயணியை கன்னத்தில் அறைகிறார்.

இதில் அவர் கீழே விழ குழந்தை பயந்துபோய் வீரிட்டு அழுகிறது. பயணிகள் அதிர்ச்சியுடன் பார்க்க அதைப்பற்றி கவலைப்படாத நடத்துனர் மீண்டும் மீண்டும் அந்தப் பெண்ணைத்