மதுரையில் மேல அனுப்பானடி பகுதியில் சுவாமி வீதிஉலா சென்ற போது பத்திரிகை புகைப்படக்கலைஞர் பணியாற்றியபோது தடுத்து, திட்டி, தாக்கி, பொது இடத்தில் மானபங்கபடுத்தி மிரட்டி, உடமைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் இளம் பெண் பொறியாளர் தற்கொலை வழக்கில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது ஆனவர் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் 23-01-2016 அன்று நடைபெற்ற கதிர் அறுப்பு விழா வைபவத்தையொட்டி மாநகரில் முக்கியமாக அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
இளம் பெண் பொறியாளர் தற்கொலை வழக்கில், அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது ஆகி , தற்போது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சேதுமணி மாதவன் அந்த வீதி உலா நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில் தினத்தந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் சரவணன் , அந்த சுவாமி வீதி உலா நிகழ்வை புகைப்படசெய்தி பதிவு செய்ய சென்றபோது அவரை புகைப்படம் எடுக்ககூடாது என பணியாற்ற விடாமல் தடை விதித்துள்ளார் .
மேலும் பெண்களுக்கு மத்தியில் அதிகார தோரனையில் பெண்கள் கூட்டம் அதிகமாக உ ள்ள போது அந்த கூட்டத்தில் புகுந்து கொண்டு பெண்களை உரசு வதற்காகவே பத்திரிகை புகைப்படக்கலைஞர் என வந்து இருக்கியாடா நீ ……………..
( பதிவிட முடியாதா வார்த்தைகள்) என அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பொது இடத்தில் திட்டி
மானபங்கபடுத்தியுள்ளார் சேதுமணி மாதவன்.
அதற்கு சரவணன் தினத்தந்தி பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக பணியற்றுவதாகவும். மேலும் நடைபெறும் நிகழ்வை பத்திரிகையில் வெளியிடுவதற்க்காக அவர் பணியாற்றும் நிறுவனம் புகைப்படம் எடுத்துவர சொல்லி அனுப்பியுள்ளதாக காவல் ஆய்வாளரிடம் கூறியுள்ளார். மேலும் பொது இடத்தில் எவரிடமும் நாகரிகமாக நடந்து கொண்டு , முதலில் பேசுங்கள் என்றும் நான் பொது இடத்தில் புகைப்படம் எடுக்க செல்வதை நீங்கள் தடை விதித்து தடுக்ககூடாது என்று தினத்தந்தி பத்திரிகையால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை காட்டி கூறியுள்ளார் .
பெண்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் பெண் பொறியாளர் தற்கொலை வழக்கில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது ஆன ஆய்வாளர் சேதுமணி மாதவன், புகைப்படக்கலைஞர் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டு நீ பத்திரிகையில் வேலை பார்த்தால் என்ன பெரிய புடுங்கியா? நீ என்னை ஒன்றும் புடுங்க முடியாது, என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவரது புகைப்படக்கலைஞரின் இரு சக்கர மோட்டார் சைக்கிள், ஏடிஎம் கார்டு, மணி பர்ஸ், மற்றும் தினத்தந்தி பத்திரிகையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்று விட்டார்.
இந்த நிலையில் தினதந்தி நிர்வாகம் உடனடியாக புகைப்படக்கலைஞர் சரவணனை பணியாற்ற விடாமல் தடுத்து,பொது இடத்தில் திட்டி, தாக்கி, அவமானபடுத்தி மிரட்டி, உடமைகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளர் சைலேஷ் குமார் யாதவ்விடம் அவரது அலுவலகத்தில் புகார் அளித்தது.
அதன் அடிப்படையில் நடைபெற்ற சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவனிடம் விசாரனை செய்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் உதவி ஆணையாளருக்கு சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிட்டடார் .
காவல் ஆய்வாளரிடம் விசாரனை மேற்கொண்ட காவல் உதவி ஆணையாளர் புகைப்படக்கலைஞரிடம் பறிமுதல் செய்த அனைத்து உடமைகளையும் காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கே கொண்வர உத்தரவிட்டு தினத்தந்தி நிர்வாகத்தினரிடம் அந்த உடமைகளை மட்டும் ஒப்படைத்தார்.
காவல் துறையில் காட்டுதர்பார் நடத்தி பல்வேறான அராஜகங்களை செய்யும் அந்த காக்கி உடையணிந்த கருப்பு ஆட்டின் பின்னனி என்ன ?
கடந்த 9 ஆண்டுகளுக்குமுன் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் இளம் பெண் பொறியாளர் தற்கொலை வழக்கில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது தஞ்சையில் ஆனவர்.
தஞ்சையில் பாலியல் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட பெண் பொறியாளர் கடித நகல் தட வியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார்சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
கோவை பெண் பொறியாளர் அகிலாண்டேசுவரியின் தற் கொலை வழக்கு விசாரணையில் நிறைய விவரங்கள் தெரியவந்து உள்ளன. காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன், அகிலாண்டேசுவரி மற்றும் அவரது பெற்றொருடன் போனில் தொடர்புவைத்து இருந்திருக்கிறார்.
மேலும் 17-11-2007-ந்தேதி அன்று நள்ளிரவு 1 மணி அளவில் அகிலாண்டேசுவரி தஞ்சைக்கு வருவது குறித்து அவரிடம் இருந்து கிடைத்த குறுந்தகவலின் பேரில் சேதுமணி மாதவன் பேருந்து நிலையம் சென்று அவரை காவல்துறையின் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தெற்கு காவல் நிலையத்துக்கு வந்து அதன் பின்னர் ஒரு தனியார் தங்கும் விடுதியில் அரசு என்ற பெயரில் அகிலாண் டேசுவரியின் தந்தை முன்பதிவு செய்து இருந்த அறையில் தங்கவைத்து உள்ளார்.
மீண்டும் 19-11-2007-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு அவர் தங்கி இருந்த தங்கும் விடுதிக்கு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன், சென்று பார்த்தது தெரியவருகிறது.இவ்வாறு அகிலாண்டேசு வரியுடன் சேதுமணி மாதவன் தொடர்ந்து கைப்பேசி மூலமும் நேரிலும் தொடர்பு கொண்டதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்ததால் சேதுமணி மாதவனை நவம்பர் 21-ந்தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்.
குற்றவழக்கில் தொடர்புடைய ஒரு எதிரியை அதுவும் பெண்ணை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்து லாட்ஜில் தங்கவைத்து மறுபடியும் அவருடன் இறப்பதற்கு முன்பும் சென்று பார்த்துவந்த முறைகேடான செயலுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கைபடி தஞ்சை சரக காவல் துறை தலைவர் ஆபாஷ் குமார் காவல் ஆய்வாளர் சேது மணிமாதவனை பணியிடை நீக்கம் செய்தார்.
தமிழக காவல் துறையை கட்டுபாட்டில் வைத்து இருக்க கூடிய முதலமைச்சர் ஜெயலிதாவின் மிக நெருங்கிய தோழி சசிகலாவுக்கு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் நெருங்கியவராம்.
அதனை சாதகமாக பயன்படுத்தி பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தன்னிச்சையாக காட்டுதர்பார் நடத்தி அராஜகமாக பல்வேறான முறைகேடுளை மூலம் கல்லா கட்டி கவால் துறைக்குள் காக்கி உடை அணிந்த கருப்பு ஆடாக பண வெறி பிடித்து சுற்றி திரிவதாக காவல் துறை வட்ராங்களில் பேசப்படுகிறது.
முக்கியமாக காவல் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் எவரேனும் , ஊடக துறையினரால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தால், பலர் வஞ்சம் கொண்டு, அவர்களின் அதிகாரத்தை காட்டிகொண்டு , ஊடக துறையில் பணியாற்றுபவர்களை கண்டால் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, தன்னிச்சையாக, அராஜகமாக மிரட்டி பல்வேறான இடையூறுகளை அளிப்பது காலம் காலமாக நடைபெறுவது தான் .
அதிகாரிகள் இடையூறு அளித்தாலும் ஊடக துறையினர் எல்லை மீறாமல் அவர்களிடம் நடந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது தான் ஊடக நிறுவனம் அறிவுறுத்தி அனுப்புவர். அதன் படி ஊடக துறையினர் அனைவரும் பணியாற்றும் பக்குவம் கொண்டவர்கள் தான்.
கடந்த 9 ஆண்டுகளுக்குமுன் இளம் பெண் பொறியாளர் தற்கொலை வழக்கில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது ஆகி தற்போது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சேதுமணி மாதவனின் உண்மையான முகத்திரையை கிழித்து எரிந்தது , உலகிற்க்கு வெளிச்சம் போட்டு காட்டியத்தில் முக்கிய பங்கு வகித்தது தினதந்தி மற்றும் அதன் சார்பு நிறுவன ஊடகங்கள் தானாம்.
அதனால் வஞ்சம் கொண்டுள்ள சேதுமணி மாதவன் காவல் துறையில் எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும் அந்த ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்களை கண்டால் அவர்களிடம் தேவையில்லாத வீண் பிரச்சனையை கிளப்பி அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி பொது இடத்தில் திட்டி மானபங்க படுத்துவதாக சொல்லப்படுகிறது.
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைதாகி, தற்போது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சேதுமணி மாதவன் மதுரை மாநகரில் முக்கியமாக அதிகமான பெண்கள் கலந்து கொள்ளும் சுவாமி வீதி உலா நடைபெற்ற போது கூட்டத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருந்தாலும் இருக்கலாம்.
அந்த நிகழ்வை புகைப்படக்கலைஞர் சரவணன் புகைப்படசெய்தி பதிவு செய்து விட்டாரோ என நினைத்து அவர் பணியாற்றியபோது தடுத்து, திட்டி, தாக்கி, பொது இடத்தில் மானபங்கபடுத்தி மிரட்டி, உடமைகளை பறிமுதல் செய்து இருந்தாலும் இருப்பார்.
காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் ஏற்கனவே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டவர் என காவல் துறைக்கு தெரிந்தும் அவரை பொதுமக்களிடம் நெருங்கி பழகும் அளவில் அவருக்கு பணியிடம் ஒதுக்குவதே முதலில் தவறானது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களை அடையாளம் கண்டு பெண்கள் தான் அவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேaண்டும்.
தினத்தந்தி ஊழியருக்கு காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவனால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அவர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளர் சைலேஷ் குமார் யாதவ்விடம் புகார் கொடுத்தில் ஊழியரின் உடமைகளை திரும்ப ஒப்படைத்ததே அருமையான நடவடிக்கை .
பத்திரிகை புகைப்படக்கலைஞரை பணியாற்றியபோது தடுத்து, திட்டி, தாக்கி, பொது இடத்தில் மானபங்கபடுத்தி மிரட்டி, உடமைகளை பறிமுதல் செய்தமைக்காக காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் மீது வழக்கு பதிவு செய்ய காவல் ஆணையாளர் சைலேஷ் குமார் யாதவ் உத்தரவிடுவாரா என்ன ?
காவல் ஆணையாளர் சைலேஷ் குமார் யாதவ் காவல் ஆய்வாளர் சேதுமணி மாதவன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டாலும் முதலமைச்சர் ஜெயலிதாவின் மிக நெருங்கிய தோழி சசிகலாவுக்கு நெருங்கியவர் என கூறப்படும் சேதுமணி மாதவன் காவல் ஆணையாளரை பழிவாங்கி பந்தாடி விடமாட்டாரா என்ன?
என்ன நடக்க போகிறது என அனைவரும் பொறுத்து இருந்து பார்போம் .


