தெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
vishal marriage - 2026

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டிய பின்னர்தான் தனது திருமணம் என்று அறிவித்திருந்தார். தற்போது நடிகர் சங்கக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தெலுகு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்ய இருப்பதாக நடிகர் விஷால் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

anisha vishal - 2026

அனிஷா ரெட்டியை கட்டிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள விஷால், ஆமாம். அவரும் ஆமாம் என்று உறுதி செய்துள்ளார். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விஷால் திருமணம் செய்ய உள்ள அனிஷா ரெட்டி அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.