மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்பு!

சற்றுமுன் புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்
meenakshi amman temple madurai - 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உப கோயில்களுக்குச் சொந்தமான 94 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப் பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சொத்துகள் விவரம்..

  • மதுரை நகரில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சித்த வைத்திய சாலை கட்டடம்
  • 24.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேரடி மண்டபக்கடை
  • ரூ.8 லட்சம் மதிப்புள்ள செல்லூர் திருவாப்புடையார் கோயில் மண்டபம்,
  • 38.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி குடியிருப்பு கட்டடம்
  • 3.53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எழுகடல் வணிக வளாகம் கடை.
  • மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் 4.32 லட்சம் மதிப்புள்ள ஆவின் பூத், 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டான் டீ பெட்டி அகற்றப்பட்டது.
  • பொன்மேனியில் கோயில் பணியாளர்களே ஆக்கிரமித்திருந்த 51 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.4 ஏக்கர் நிலம் மீட்கப் பட்டது.
  • விருதுநகர் எரிச்சநத்தம் 7 ஏக்கர் புஞ்சை நிலம்
  • சிவகங்கை திருப்புவனம், திருச்சி மணப்பாறை 53.35 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள்

இப்படி மீட்கப் பட்ட சொத்துகளின் மதிப்பு மொத்தம் 93 கோடியே 84 லட்சம் ரூபாய் என்றும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.