‘10 இயர் சேலஞ்ச்’ல் ஸ்டாலினின் கலக்கல் சேலஞ்ச்!

Published:

stalin 10year challenge - 2026

சமூக வலைதளங்களில் ’10 இயர் சேலஞ்ச்’ என்ற ஹேஸ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கியுள்ளனர். இதில் 10 வருடத்துக்கு முந்தைய புகைப்படத்துடன், தற்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தையும் போட்டு பதிவிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கில் அவ்வப்போது சில விஷயங்கள் நெட்டிசன்களால் ட்ரெண்ட் ஆக்கப் படும். கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என சேலஞ்ச்களின் வரிசையில் இப்போது ரவுண்டு கட்டும் சேலஞ்ச் ‘10 இயர் சேலஞ்ச்’

வலைத்தளங்களில் உலவிக் கொண்டிருக்கும் பலரும் தங்களது பழைய புகைப்படத்துடன் இப்போதைய படத்தையும் போட்டு, அந்த வித்தியாசத்தை உணர்த்தி வருகின்றனர். சினிமா, நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், சமூகப் பிரபலங்கள் மட்டுமல்ல, சோஷியல் மீடியா பயன்படுத்தும் பலரும் இந்த சேலஞ்சை ஏற்று பதிவிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள்தான் இப்போது பிரபலம். பலராலும் ரசிக்கப்பட்டு வரும் இந்த சேலஞ்சில் தமிழ் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படம்தான்… ஸ்டாலினின் 10 இயர் சேலஞ்ச்.!

அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக இருக்கும் ஸ்டாலினுக்கு அடுத்த 10 இயர் சேலஞ்ச் போட்டி வைத்தாலும், இந்தப் படமே மறு உருவாக்கம் செய்யப்படும் என்று கேலியும் கிண்டலும் தூள்பறக்கிறது!

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img