ஓர் இந்துவையே பலிகடா ஆக்கிய லயோலா! புகார்களை திரும்பப் பெறாதீர்கள்!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி
loyola college 1 - 2026

லயோலா கல்லூரியின் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ள காளீஸ்வரன், ஒன்று நிர்வாகத்தின் கட்டாயத்துக்கு உட்பட்டு மன்னிப்புக் கடிதம் அளித்திருக்க வேண்டும்; அல்லது அவரும் ஒரு இளிச்சவாய் இந்துவாக இருக்க வேண்டும்.

எமக்குக் கிடைத்த தகவலின்படி நூற்றுக்கணக்கான புகார்கள் ஆன்லைனிலும் நேரிலும் அளிக்கப்பட்டுள்ளன. சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும் அவ்வளவு சாதாரணமானவை அல்ல. தற்போது புகார் அளித்திருக்கிறவர்கள் தங்களது புகார்களைத் திரும்பப் பெறாத வரையில், வழக்குப் பதிவு செய்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறது. அதுதான் சட்டமும் கூட!

அப்படி இருக்கும்போது, இனி வழக்குகள் தொடரப்படும் போது, இந்த காளீஸ்வரன் தான் நீதிமன்றத்துக்கு அலையப் போகிறார் என்பது தெளிவு. இதில் எவ்வளவு சாமர்த்தியமாக, ஒரு இந்துவை பலிகடாவாக்க லயோலா முயன்றிருக்கிறது என்பதை கவனிக்கவும்.

என்ன செய்யப் போகிறார்கள், யார் என்ன பேசப் போகிறார்கள், என்ன நிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றன, என்னென்ன பொதுமக்களின் பார்வைக்கு வரப்போகின்றன என்பதுகூட தெரிந்து கொள்ளாமல், இப்படியொரு விழாவை நடத்துகிற அளவுக்கு லயோலா கல்லூரி நிர்வாகம் விரல் சூப்பிக் கொண்டிருக்கிற குழந்தை என்று நம்புவதற்கு நாம் ஒன்றும் வடிகட்டின கேனயர்கள் இல்லை.

தயவு செய்து ‘இவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள். விட்டு விடுங்கள்,’ என்று வக்காலத்து வாங்காதீர்கள். அந்த வேலையைச் செய்ய லயோலாவிடம் பணம் குப்பையாய்க் குவிந்து கிடக்கிறது. வக்கீல்களுக்கும் பஞ்சம் இல்லை.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

அவர்கள் நீதிமன்றத்துக்கு வரட்டும். இது தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தியாக சிறிது காலத்துக்கு நீடிக்கட்டும். சட்டத்தை நம்பி, சட்டத்தை மட்டும் நம்பி தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின் முடிவில், நீதி யாருக்கு என்ற முடிவு வரும்வரை, உங்களது இரக்க சுபாவத்தை நன்றாகப் பொட்டலம் கட்டி ஃப்ரிட்ஜின் ஃப்ரீஸரில் பத்திரமாக வைத்துப் பதப்படுத்திக் கொள்ளவும்.

யாரும் புகாரைத் திரும்பப் பெறாதீர்கள். அதிசயமாக இந்துக்களுக்கு அவ்வப்போது வரும் ரோஷத்துக்கு தற்போது அந்தப் புகார்கள் மட்டும்தான் திடமான உதாரணமாக இருக்கிறது. தயவு செய்து அந்தக் கனலில் தண்ணீர் தெளித்துக் கொன்று விடாமல் இருப்பீர்களாக! ஆமென்க ஆமென்க!

  • வாட்ஸ்அப் வழியே வைரலாகும் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.