
பிரதமர் நரேந்திர மோடி மதுரை மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக உயர்தர பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ்ஸுக்கு அடிக்கல் நாட்ட ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தார். அப்போது மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக., சார்பில் மதுரை ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸார் வைகோவிடம் விவாதம் செய்ய, ஒரு அணிக்கு இங்கே அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இன்னொரு அணி வேறு இடம் சென்று போராடட்டும் என்று போலீஸாரிடம் போராடுகிறார் வைகோ!
அதற்கு இங்கே அனுமதி கொடுக்கப் படவில்லை என்று போலீஸார் கூறினர். தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்றது.
பின்னர், எங்களுக்கு என்ன நீ கருணை காட்டுகிறாயா, இது எங்கள் மண். எங்கள் தமிழ் மண்… என்று உசுப்பு ஏற்றுகிறார் வைகோ.
மேலும், சென்னையில் தனக்கு சலுகை கொடுத்தனர் மதுரையில் இல்லை என்று கூறிய போது, சந்தடி சாக்கில் சென்னை ஆணையர் விஸ்வநாதனையும் மாட்டி விட்டார் வைகோ.
வைகோவுக்கு ஆதரவாக, பிரதமர் மோடியை அவதூறு பேசி திட்டித் தீர்ப்பதற்கு, இஞ்சின் வைத்து மைக் கட்டி மேடை அமைக்க அனுமதி கொடுத்த ஆணையர் விஸ்வநாதனைக் காட்டிக் கொடுத்து சிக்கலில் சிக்க வைத்திருக்கிறார் வைகோ.
உங்க வேலையை செய்ங்க என்கிறார் வைகோ. தன்னை நம்பி போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த தனது தொண்டர்களை அடித்து இழுத்துச் செல்லவும் கைது செய்யவும் போலீஸாருக்கே போக்குக் காட்டி வன்முறைக் களமாக்க திட்டமிடுகிறார் வைகோ. அதற்கான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு, அவர் எங்கள் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர்… கை வைத்துவிடாதே என்று மீண்டும் மீண்டும் சொல்லி, அவர்களை அடித்து இழுத்துச் செல்வதற்குத் தூண்டில் போடுகிறார் வைகோ.
மேலும், அப்படி அடித்தால் என்ன நடந்தாலும் அதன் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு என்று போலீஸாரை பொறுப்பு ஆக்குகிறார். அவங்கள அடிச்சி இழுத்துட்டுப் போகட்டும் என்று போலீஸாரை உசுப்பு ஏற்றுகிறார். தன் தொண்டர்களை இப்படியா பலி கொடுப்பது என்று வைகோவின் துரோகப் பேச்சைக் கேட்கும் தொண்டர்களின் குடும்பத்தினர் இப்போது குமுறுகின்றனர்.
அவங்களை அடிச்சி இழுத்துட்டுப் போ என்று போலீஸாருக்குக் கட்டளை இடும் வைகோ., ஒருவரை போலீஸார் இழுத்துச் செல்லும் போது, மாவட்டச் செயலாளர் அவர்.. அவரை அடிக்காதே என்கிறார். சாதாரண கொடிபிடிக்கும் தொண்டன் என்றால் அடித்து இழுத்துச் செல்லலாம், மாவட்டச் செயலாளர் என்றால் தனி மரியாதை கொடுக்கவேண்டுமா போலீஸார் என்று கேள்வி எழுப்புகின்றனர் தொண்டர்களின் குடும்பத்தினர்.
தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் துரோகம் செய்த பச்சைத் துரோகி வைகோ இனி மதுரைக்கும் நெல்லைக்கும் வரக்கூடாது என்று அந்த அந்த ஊர் பொதுமக்கள் செருப்பையும் விளக்குமாறையும் எடுக்கும் நாள் வரும். அதை வைகோ தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்… என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
அறிவுள்ளவர்கள் அடுத்த முறை வைகோவின் பின்னால் செல்லமாட்டார்கள்.!