பாலை அண்டாவுல கொட்டுங்கன்னு சொன்னேன்..! தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க…! சிம்பு கூறிய ‘லாஜிக்’!

sddefault 36 - 2026

கட் அவுட்டில் பாலாபிஷேகம் செய்வது பற்றி தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனக் கூறினார் நடிகர் சிம்பு.

என் படம் வெளியாகும் போது பிளக்ஸ் வைப்பது, கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களை செய்ய வேண்டாம். அந்த பணத்தில் அப்பா, அம்மாவுக்கு உடை எடுத்துக்கொடுங்கள் என ‘எழுமின்’ பட விழாவில் ரசிகர்களுக்கு சிம்பு கோரிக்கை வைத்தார். இந்த வீடியோ, சிம்புவைப் பாராட்டி வைரலானது.

திடீரெனெ வேறு ஒரு வீடியோ வெளியிட்ட சிம்பு “எனது படம் வெளியாகும் போது பெரிதாக பேனர் வையுங்கள். கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யுங்கள். பால் பாக்கெட்டில் அல்ல.. அண்டாவில் பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள்” என பேசினார். சிம்புவின் கருத்துகளுக்கு தமிழ்நாடு பால் முகவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. சிம்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு “ நான் நல்லதாக ஒரு விஷயம் பேசினால் அது மக்களை சென்றடைவதில்லை. நெகட்டிவாக பேசினால் உடனே அதை ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன. சிலர் அதை சர்ச்சையாக மாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த வருடம் என் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த எனது ரசிகன் இறந்துவிட்டான். எனவே, என் ரசிகர்கள் இனிமேல் அப்படி செய்யக் கூடாது என்பதற்காகவே அந்த வீடியோவை வெளியிட்டேன். ஆனால், அது மக்களை சென்று சேரவில்லை. எனவேதான், நெகட்டிவாக பேசினேன்.

நான் பாலை எனது கட் அவுக்கு ஊற்றச் சொல்லவில்லை. பசியால் வடும் மக்களுக்கே ஊற்றச் சொன்னேன். நான் மாற்றி மாற்றி பேசவில்லை. மாற்றம் வேண்டும் என்றுதான் பேசினேன். நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் கூறிய விதத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என சிம்பு தெரிவித்தார்.

இதை அடுத்து, பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் சிம்புவிற்கு பால் முகவர்கள் சங்கம் நன்றி என்று பால் முகவர் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி ஓர் அறிக்கை வெளியிட்டார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

அதில், “கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம்” செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த 22ம் தேதி தான் வெளியிட்ட காணொளி காட்சி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாகவும், அதற்காக தான் வருந்துவதாகவும் இன்று சென்னை, தேனாம்பேட்டையில் ஊடகங்கள் முன் நடிகர் சிம்பு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். அவரது செயலை தவறென்று எடுத்துச் சொல்லி புரிய வைத்த பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் சமூக வலைதள ஊடகங்களுக்கும், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதோடு தனது “ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம்” என்பதை ஊடகங்கள் வாயிலாக ஆணித்தரமாக எடுத்துரைத்த நடிகர் சிம்புவுக்கும்எங்கள் நன்றியும் பாராட்டும் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories