பட்ஜெட் கூட்டத் தொடர் நாட்கள் குறைப்பு இல்லை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு

புது தில்லி:

ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறுவதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டதை தவிர்த்து, கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டமும் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், “பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களைக் குறைக்கக் கூடாது. பல்வேறு அமைச்சகங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்’ என்றார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், “சட்டப் பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களை குறைக்கக் கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது’ என்றார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியபோது, கடந்த இரு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களைப் போல அல்லாமல், பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். ஏழைகளின் வாழ்க்கையில் முன்னேற்றமும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கித் தர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நம்புகிறோம். எவ்வித இடையூறும் இன்றி, பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியாக நடத்த வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சு நடத்தப்படுகிறது என்றார்.

காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, தீபேந்தர் ஹூடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சரத் யாதவ், கே.சி.தியாகி, சமாஜவாதி கட்சியின் ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories