பிப்.23ல் ரயில்வே பட்ஜெட்; பிப்.29ல் மத்திய பட்ஜெட்

புது தில்லி:

மத்திய ரயில்வே பட்ஜெட் பிப்.25-ஆம் தேதியும், மத்திய பட்ஜெட் பிப்.29-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்குகிறது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,

இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.23-ஆம் தேதி தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரயில்வே பட்ஜெட் பிப்.25-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை பிப்.26-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். பிப்.29-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலாகும். பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை நடைபெறும்.

5 மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களைக் குறைப்பது குறித்து ஒரு பரிந்துரை இருந்தது. ஆனால், மத்திய அரசும், அனத்துக் கட்சிகளும் பட்ஜெட் கூட்டத் தொடரை முழுமையாக நடத்த கூட்டாக முடிவு செய்தன.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

2011-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சில மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைக்கு மசோதாக்களை அனுப்புவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இப்போது பட்ஜெட் கூட்டதொடரின் இரு பகுதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories