சே… தோனி இப்படி ஏமாத்திட்டாரே…! வைரகும் வீடியோ!

சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு
02 Oct28 dhoni - 2026

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இந்திய அணி. அந்த அணியுடனான ஒருநாள் தொடரை வென்றுள்ள இந்திய அணி, தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது.

இந்நிலையில் இரண்டாவது போட்டியில், 3 விக்கெ இழந்த நிலையில், இந்திய அணியின் நடுவரிசையில் நிதானமாகவும் அதே நேரம் கடைசிக் கட்டத்தில் அதிரடியாகவும் விளையாடி வெற்றி தேடித்தந்தார் 4வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய விக்கெட் கீப்பர் தோனி.

அவர் பொறுமையாக ஆடிக் கொண்டிருந்த போது, ஒரு பந்தை ஏதோ வீராவேசமாக அடித்து துவம்சம் செய்து சிக்ஸருக்கு பறக்க விடும் பாவனையில் கிரீஸில் இருந்து காலை எடுத்து முன்னே ஏறிப் போனார். ஆனால் பந்து சற்று எகிறி பவுன்ஸ் ஆக, உடனடியாக அந்தப் பந்தை தடுத்து பக்கவாட்டில் தட்டி விட்டு ஒரு ரன்னுக்கு ஓட்டம் பிடித்தார்.

ஆனால், அந்தப் பந்தை எப்படியும் தோனி அடிக்காமல் கோட்டை விடுவார், நாம் ஸ்டம்பிங்க் செய்து தோனியை ஆட்டமிழக்கச் செய்யலாம் என காத்திருந்த கைகளை நகர்த்தும் நியூஸி., விக்கெட் கீப்பர் டீம் ஸீபர்ட்.. பாவம்.. ஏமாந்து போனார்.
அவர் அப்படியே ஏமாந்து போய், வெறும் கையை மூடிக் கொண்டு ஸ்டம்ப் நோக்கி நகர்த்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. சில நேரங்களில் ரசிகர்களைத்தான் ஏமாற்றுவார் தோனி. இந்த முறை விக்கெட் கீப்பரை ஏமாற்றி விட்டார் என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றார்கள் டிவிட்டர் வாசிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.