December 6, 2025, 5:50 AM
24.9 C
Chennai

எங்க ‘ஒயிக’ன்னு சொல்றாய்ங்களோ… கற்பு கொடி காட்றாய்ங்களோ… அந்த தமிழகத்துலதான் போட்டியிடப் போறாரு மோடி..!

modi laughing - 2025

தமிழகத்தில் இருண்டு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட திட்டம் தீட்டுகிறார் மோடி என்று கடந்த சில வாரங்களாக தேசிய அரசியலில் குறிப்பாக தலைநகர் தில்லியில் பல கருத்துகள் உலா வருகின்றன!

தில்லியில் பிரதமர் மோடி குறித்த அரசல் புரசல் தகவல்களில், வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து, தாம் இரண்டாவது தொகுதியாகத் தேர்வு செய்து மோடி போட்டியிடப் போவதாக தில்லியில் உள்ள பாஜக.,வினர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்தத் தகவல்களை பாஜக உயர் மட்டத் தலைவர்கள் மறுத்துள்ள போதிலும், தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியை தனது இரண்டாவது தொகுதியாக பிரதமர் மோடி தேர்ந்தெடுத்து போட்டியிட்டால் அது கட்சிக்கு பல்வேறு வழிகளில் நன்மை தரும் என்றும் கூறுகின்றனர்!

பாஜகவுக்கு வடக்கே ஏதாவது தொகுதிகள் குறைந்தால் அது தெற்கில் ஈடு கொடுக்கும் என்று நம்புகின்றனர்! தமிழகத்தில் மோடியே நேரடியாக போட்டியிட்டால் அது பாஜக மற்றும் கூட்டணிகளுக்கு 6 முதல் 12 தொகுதிகள் அதிகரித்துக் கொடுக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன!

madurai pm modi - 2025

மோடி போட்டியிட்டால், அது கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் நம்பிக்கையும் உத்வேகமும் தருவதுடன் கூடுதல் தொகுதிகளை தமிழகத்தில் கைப்பற்ற வாய்ப்பாகவும் அமையும் என்று கூறப்படுகிறது! வட இந்தியாவில் தொகுதிக் கணக்கில் குறைவுபட்டால் தென்னிந்தியா இந்த முறை மோடிக்குக் கைகொடுக்கும் என்கிறார்கள்!

தென்னிந்தியாவில் தனது தளத்தை பரப்புவதற்கு பாஜக,ம்வுக்கு நீண்ட நாட்களாகவே ஒரு பெரும் கனவு இருந்து வருகிறது,. தென்னிந்தியாவின் குமரி முனையில் ஒரே ஒரு எம்பி தொகுதியை வைத்துக் கொண்டிருக்கும் பாஜக இந்த முறை தன்னுடைய செல்வாக்கை பரவலாக்க விரும்புகிறது!

madurai modi2 - 2025

தமிழகத்தில் மோடி ஒரு வெற்றிகரமான வேட்பாளராக இருப்பார் என்றும் தற்போதைய காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அது உதவும் என்றும் உறுதியாக நம்புகின்றனர் தலைநகர் வாசிகள்! 1991 வரை காங்கிரஸே வடக்கு மற்றும் தென் இந்தியாவில் செல்வாக்கான கட்சியாக திகழ்ந்து வந்தது! அதன் காரணமாகவே மத்தியில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருந்து வந்தது. 91க்குப் பிறகு அந்த நிலை மாறியது.

தமிழகத்தில் கடந்த 2014இல் போட்டியிட்ட பாஜக 5.5 சதவீத வாக்கு பகிர்வை கொண்டிருக்கிறது! அந்த நேரத்தில் சிறிய கட்சிகளுடன், தேமுதிக பாமக மதிமுக ஆகிய கட்சிகளுடனும் சேர்ந்து பாஜக போட்டியிட்டது! அந்தத் நேரத்தில் இத்தகைய ஓட்டுப்பகிர்வு கிடைத்தது ! இருப்பினும், இப்போது கூடுதல் பலத்துடன் போட்டியிட விரும்புகிறது பாஜக.,!

laughing modi - 2025

தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனிக் கவனம் உள்ளது. அது பல முறை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது! பிரதமர் மோடி தமிழகத்தில் தன்னுடைய கவனத்தை எப்பொழுதுமே செலுத்தி வந்திருக்கிறார்! அப்துல் கலாமின் இறுதி மரியாதை நேரத்திலும், பல்வேறு சூழ்நிலைகளிலும் தமிழகத்தில் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் மோடி! கலாம் என்றால் கலகம் என்று ஏளனப் படுத்தி, ஒரு மாபெரும் தேசபக்தரை முன்னாள் குடியரசுத் தலைவரை இழிவுபடுத்தி உள்ளுக்குள் மகிழ்ந்த குரூர புத்தி கொண்ட திமுக., தலைவர் மு.கருணாநிதி அந்த இறுதிச் சடங்கை தவிர்த்த போதும், தானே எல்லாம் என்ற அகந்தையில் திளைத்த ஜெயலலிதா அந்த இறுதிச்சடங்கைத் தவிர்த்த போதும், ஒரு பிரதமராக இருந்து தமிழகத்தின் தலைமகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, பின்னாளில் மணிமண்டபம் அமைய வித்திட்டுச் சென்றார் மோடி.

ஜெயலலிதா கருணாநிதி ஆகியோரின் கடைசிக் காலங்களிலும் தாமாகவே வந்து அஞ்சலி செலுத்தியதுடன் தமிழக தலைவர்களுடன் தன்னுடைய நெருக்கத்தையும் காட்டி வந்திருக்கிறார் மோடி.

குறிப்பாக, நரேந்திர மோடி, துக்ளக் ஆசிரியராக இருந்த சோ ராமசாமியின் தேர்வு என்பது தமிழகத்தில் அவருக்கு இருக்கும் நெருக்கத்துக்கு இன்னொரு காரணம்.! சோ உடன் இருந்த நெருக்கம் மற்றும் தமிழக அறிவுஜீவிகள் தலைவர்களிடம் மோடி வைத்திருந்த நம்பிக்கை ஆகியவற்றை அவர் எப்போதுமே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் தமிழகத்தின் மீது மோடியின் பார்வை அதிகமாகவே இருக்கிறது என்று தலைநகர் வாசிகள் கருதுகிறார்கள். எனவே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்தோ அல்லது கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்தோ போட்டியிடலாம் என்று கட்சியில் கருத்து நிலவுகிறது

அதிமுக, பாஜக, விஜயகாந்தின் தேமுதிக, ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, உள்ளிட்ட கட்சிகள் வட தமிழகத்திலும் மேற்கு தமிழகத்திலும் நல்ல செல்வாக்கையும் வாய்ப்பையும் பெற்றுத் தரும் என்று பாஜக தலைவர்கள் நம்புகின்றனர்.

துக்ளக் இதழின் விழாவில் அதன் ஆசிரியர் சோ, அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை தமிழக மக்களிடம் முன்னிறுத்தி, பின்னாளில் பிரதமர் வேட்பாளரும் இவரே என்று முன்மொழிந்தர். அவர் அறிமுக உரையில், நாட்டின் பயங்கரவாதம் ஊழல் அதிகார வர்க்கத்தின் இயலாமை, வேலை செய்யாமை என அனைத்து பிரச்னைகளுக்கும் சாவுமணி அடிக்கப் போகும் மரணவியாபாரி என அறிமுகப் படுத்தினார்..அந்த வீடியோ…

News Summary:
Over the last few weeks, the political corridors of the national Capital are rife with speculations that Prime Minister Narendra Modi may choose a Tamil Nadu constituency as his second seat to contest from during 2019 Lok Sabha polls. “In a strategically fought election with allies and Modiji as the candidate, the BJP stands a fair chance to win anywhere between 6 to 12 seats in Tamil Nadu. It can have a ripple effect on the elections, and will help the party bridge the shortfall that may occur in North India,” said a source.

News Source: DNA

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories