பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று ஆளுநர்கள் மாநாடு

Published:

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஆளுநர்கள் மாநாடு இன்றும், நாளையும் நடை பெற உள்ளது.

இந்த மாநாட்டில் தீவிரவாத செயல்களுக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மத்திய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து  விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில்  23 மாநில ஆளுநர்களும் மற்றும் 2 துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் துணை குடியரசு தலைவர் அமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img