சென்னை- செங்கோட்டை சிலம்பு எக்ஸ்ப்ரஸ் இனி வாரம் மூன்று முறை!

சற்றுமுன் சென்னை நெல்லை லைஃப் ஸ்டைல்

silambu - 2026

வண்டி எண் 16181/16182 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை என்பதில் இருந்து வாரம் மூன்று முறை இயக்கப் பட வுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.

வரும் பிப்.25ஆம் தேதி திங்கள் கிழமையில் இருந்து வண்டி எண் 16181 சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு திங்கள், புதன், சனிக்கிழமைகளில் செல்லும்.

வரும் பிப்.26 ஆம் தேதி செவ்வாய் முதல், வண்டி எண் 16182 செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் செல்லும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.

வண்டியின் பெட்டி அமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப் பட்டிருக்கிறது. இந்த ஒரு சேவை அதிகரிப்பு மூலம், பயணிகளுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.