தமிழகத்தை பொறுத்தவரையில் எங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதியாகக் கூறினார்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ரஜினி ரசிகர் மன்றத்தினர் தி.முக.வில் இணையும் விழா நடைபெற்றது.
அப்போது அவர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக., காலூன்ற முடியாது. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியவர்கள் தி.முகவில் இணையும் நிகழ்வு முக்கியமான தருணம்.
மீண்டும் கூறுகிறேன் தமிழகத்தை பொறுத்த வரையில் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று உறுதிபடக் கூறினார்.
ஆனால், மம்தா பானர்ஜி கோல்கத்தாவில் நடத்திய கூட்டத்தில் ஸ்டாலின் இது பற்றி வாயே திறக்கவில்லை! காரணம், அவர் தமிழ்நாட்டில் இருந்து தான் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தார்.
ஆனால் சிறிது காலம் முன், ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு.. ஸ்டாலின் அளித்த பதிலைக் கொஞ்சம் கேளுங்க…




