முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
நளினி உள்ளிட் ட கொலையாளிகள் 7 பேரும் ஏற்கனவே தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர். தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கதது .
இந்த நிலையில் சிறையில் உள்ள கொலையாளிகள் 7 பேரின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளது.
கொலையாளிகள் 7 பேரை விடுதலை முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.


