தேர்தலில் அரசியல் ஆதாயம் அடையவே அதிமுக அரசாங்கம் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாக வைகோ, திருமாவளவன் குற்றசாட்டு !

Published:

 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.

கொலையாளிகள் 7 பேரை விடுதலை முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று ஞானதேசிகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

நளினி உள்ளிட் ட கொலையாளிகள் 7 பேரும் ஏற்கனவே தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.

கொலையாளிகள் 7 பேரும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தவுடன் ஏன் திமுக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை ? என வைகோ, திருமாவளவன் ஆகியோர் வினா எழுப்பியுள்ளனர்.

மேலும் தமிழக சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக அரசாங்கம் அரசியல் ஆதாயம் அடைய ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தற்போது முடிவு எடுத்து இருக்கலாம் என வைகோ, திருமாவளவன் ஆகியோர் குற்றம்சாட்டி கருத்து கூறியுள்ளனர்

 
ALSO READ:  இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?

Related articles

Recent articles

spot_img