விஜய் மல்லையா மீது யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை

சற்றுமுன்

வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாத விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனத்தின் மீது யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை என சிபிஐ இயக்குனர் அனில் சின்ஹா கூறியுள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக புகார் அளிக்க எந்த வங்கியும் முன்வரவில்லை என்று கூறிய அனில் சின்ஹா, 2015ம் ஆண்டில் சிபிஐ, தானாக முன் வந்து அந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்ததாக கூறினார். இதுபோன்ற செயல்பாடுகளால் வங்கிகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2009ம் ஆண்டில், 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்திய வங்கிகளின் வாராக்கடன், தற்போது மூன்று லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்த சின்ஹா, இதுகுறித்த விசாரணையை தாமதப்படுத்தினால், கடன் செலுத்தத் தவறியோர், பணத்துடன் நாட்டை விட்டுத் தப்பித்து விடுவார்கள் என்றும் எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.