மே 9 அன்று திரைக்கு வருகிறது சிம்புவின் வாலு

Vaalu_B சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘வாலு’. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி இருக்கிறார். படத்தின் ரிலீஸ் தேதி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு தேதியாக அறிவிக்கப்பட்டு பின் மாற்றலாகி வருகிறது. இறுதியில் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வேட்டை மன்னன் படத்தை நிறுத்திவிட்டுதான் வாலு படத்தை சிம்பு அறிவித்தார். இரண்டே மாசம் படப்பிடிப்பு நடத்தி மூன்றாவது மாசம் படம் ரிலீஸ் என பில்டப்பெல்லாம் பலமாக இருந்தும், படத்தை வருடக்கணக்கில் இழுத்தடித்து அண்மையில்தான் நிறைவடைந்தது. மே 9 ஆம் தேதி சனிக்கிழமை படத்தை வெளியிடுகின்றனர். பொதுவாக வெள்ளிக்கிழமை படங்கள் வெளியாகும். பண்டிகைகள் இருந்தால் வார தினங்களில் வெளியிடுவார்கள். ஆனால் வாலு – பேருக்கு ஏற்ப சனிக்கிழமை வெளியாகிறது வாலுபட போஸ்டர் வெளியீட்டையடுத்து ட்விட்டரில் #Vaalu என பலரும் டிவிட்டில் கலக்கி வருகின்றனர்.