ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜய்சேதுபதி

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

rajini vijaysethupathi2 1 - 2026சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பதாக ஒப்புக்கொண்டு பின்னர் ஒருசில காரணங்களால் நடிக்க முடியாமல் போன ஒரு படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

அந்த படம் தான் ‘கடைசி விவசாயி. இந்த படத்தை ‘காக்கா முட்டை’, குற்றமே தண்டனை மற்றும் ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளார்

‘கடைசி விவசாயி’ படத்தின் கதையை கேட்டதும் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் ஒருசில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.