பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்ததைத் தொடர்ந்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நீரி என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது.
இதை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியாளர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. டெல்லி உத்யோக் பவனில் மத்திய தொழில்துறை கூடுதல் செயலர் ஷைலேந்தர் ஷிங் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நீரி வகுத்துள்ள பார்முலாக்களின் அடிப்படையிலே பட்டாசுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் நீரியின் லோகோ மற்றும் QR கோடு இடம்பெற்றிருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நீரியின் லோகோ மற்றும் QR கோடு இல்லாத பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வரும் இன்று முதல் பட்டாசு உற்பத்தி தொடங்கப்படும் என்றும், வரும் 30-ம் தேதி முதல் உற்பத்தி முழு வீச்சில் தொடங்கப்படும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.