மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று வேட்பு மனு செய்துள்ளனர்.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 11.30 மணி முதல் 12 மணிக்குள் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
தென்சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.




