பெரியகுளம் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முருகன் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் மயில்வேல் என்பவரை வேட்பாளராக அதிமுக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர் முருகன் மாற்றப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் மயில்வேல் என்பவர் அதிமுக சார்பில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.