மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கினார். பிரச்சாரத்தின் போது கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷை ஆதரித்தும், வாக்கு கேட்டும் பேசினார். தனக்கு ராசியான அகாவிலான வெற்றி விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர் முதல்வர் பிரச்சாரத்தை துவக்கினார்.
இதில் பேசிய அவர் பிரதமர் நரேந்தி மோடி சிறப்பாக ஆட்சி செய்வதால் அவரை அதிமுக ஆதரிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கருமந்துறையில் தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார்.