போட்டியிடுவது நாடாளுமன்றத் தேர்தலில்! டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையோ பிரமாதம்!

Published:

ttvdinakaran electionmanifesto - 2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்கட்சியின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

17வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்டவை இப்போது களை கட்டியுள்ளன. இந்நிலையில் பல்வேறு கட்சிகளும் ஒப்புக்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

மத்தியில் ஆள்வதற்கான வாய்ப்பு இல்லாத கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது கேலிக்கூத்து என்பதுடன் அவற்றை எவரும் பொருட்படுத்துவது கூட இல்லை என்பதுதான் உண்மை.

தேசியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையே கேலிக்கூத்தாக உள்ள நிலையில், மாநிலக் கட்சிகள் ஓரிரண்டு தொகுதி வெற்றிக்காக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, மக்களைக் குழப்புவது, அதுவும், தங்களால் எந்த வகையிலும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத செயல்களை எல்லாம் செய்வேன் என்று கூறி வாக்குறுதி கொடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர் என்று கூறுகின்றார்கள் விமர்சகர்கள்.

இதனிடையே இன்று காலை அமமுக., கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சி தலைவர் தினகரன் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள உறுதிமொழிகள் வருமாறு:

  • தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை
  • நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
  • ஜி.எஸ்.டி., கவுன்சில் நிர்வாகத்தில் மாற்றம்
  • மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் கல்வித்தொகை
  • பேரிடர் மறுவாழ்வு மையம் நிரந்தரமாக அமைக்கப்படும்
  • சமையல் காஸ் மானியம், மாநில அரசு சார்பில் 1000 வழங்கப்படும்

  • முதியோர் உதவித்தொகை ரூ. ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்

  • மத்திய, மாநில அரசு பணியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை
  • மாணவர்கள் நல வாரியம் அமைக்கப்படும்
  • மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் கடன்
  • அனைத்து விவசாய கடன் தள்ளுபடி

  • கச்சத்தீவை மீட்க நடவடிக்கை

  • மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
  • கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
  • கிராமப்புற பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரை கடன்
  • ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா கிராமவங்கி

  • குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சென்னையில் நலவாரியம்
  • சிறு, குறு தொழிற்சாலைகள் துவக்கப்படும்
  • கேபிள்கட்டணம் குறைக்கப்படும்
  • கனிமங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

  • கூடங்குளம் அணு உலை கைவிட வலியுறுத்தப்படும்

  • பெட்ரோல் பொருட்கள் விலையை கண்காணிக்க தனி ஆணையம்
  • சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை
  • கோவை,மதுரை,திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம்
  • தமிழகத்திற்கு தனி செயற்கைகோள்

  • ஏழை பெண்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் இலவசம்

  • மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை
  • ஏழை இஸ்லாமியர்களுக்கு இலவச வீடு
  • இயற்கை வளத்தை பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்

  • நெல்,கரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆதாரவிலை

  • கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்
  • 6 இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள்
  • விவசாய, மீனவ, நெசவாளர் , அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை
  • காவிரி டெல்டா பகுதியில் வேளாண்மண்டலம்
  • கிராமம்தோறும் ஆழ்துளை கிணறு

  • இவை எல்லாம் டிடிவி தினகரன் வெளியிட்ட தேர்தல் அறிக்கை.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

சொன்னதுதான் சொன்னார்… அதென்னா ஏழை இஸ்லாமியருக்கு?! ஒரு வேளை இஸ்லாமியரில் ஏழைகளே இல்லை என்பதால் தைரியமாக சொன்னாரோ?!

அனைவருக்கும் இலவச வீடு.. அதற்கு அட்வான்ஸ் டோக்கனாக ஒரு 20 ரூபாயில் வீடு படம் வரையப் பட்ட பிட் நோட்டீஸ், அவரவர் பூத் எண், வாக்காளர் அடையாள எண் குறிப்பிடப் பட்டு கொடுக்கப் படும் என்றெல்லாம் கூட அறிவித்திருக்கலாம் என்று நக்கல் செய்கின்றனர்.

காரணம், வெற்றி பெற்று வந்தால்தான் வாக்குறுதிகளைப் பற்றி யோசிக்க வேண்டும், தினகரன் போன்றவர்கள் இன்னும் பலமான வாக்குறுதிகளைக் கொடுத்து, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளுக்கு கிலியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்பதுடன், இவ்வளவு சின்னத்தனமாகவா சிந்திப்பார்கள் என்றும் கேட்டு வருகிறார்கள் பலர்.

இதனிடையே, தேர்தல் அறிக்கையை வெளியிடு தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்; தேசியக் கட்சிகள் தமிழக பிரச்னையில் அக்கறை கொள்வதில்லை. இதனால் மாநில கட்சியால்தான் உரிமையை பாதுகாக்க முடியும். பிரதமர் என்பது முக்கியமல்ல. மாநில உரிமையே முக்கியம். இந்திய பிரதமரை தேர்வு செய்யும் இடத்தில் தமிழக மக்கள் உள்ளனர். தமிழகத்தில் தானாகவே ஆட்சி கவிழும். மோடியை எதிர்த்து நிற்கும் எங்களுக்கே மக்கள் ஓட்டளிப்பார்கள் என்று வேறு தினகரன் கூறினார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img