இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா

சற்றுமுன் விளையாட்டு

ipl 1 - 2026

12வது இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அணியை பொருத்தவரை அம்பத்தி ராயுடு மற்றும் ஷேன் வாட்சனை தொடக்க வீரராக களமிறங்குகின்றனர். சுரேஷ் ரெய்னா மூன்றாவதாகவும், தோனி நான்காவதாகவும் களமிறங்க உள்ளனர். ஆல்ரவுண்டர் ஜடேஜா, கேதர் ஜாதவ், பிராவோ போன்ற வீரர்களால் சென்னை அணி கூடுதல் பலத்துடன் உள்ளது.

இதேபோன்று விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். இதனால் நாளையை போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதும் புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.