
நிலம் பதிவு செய்வதில் தாமதம் செய்ததால் பெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரிக்கப்பட்டார்.
தெலங்காணா ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாசில்தார் விஜயா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கட்கிழமை இன்று மதியம் சுரேஷ் என்பவர் எம்ஆர்ஓ மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டார். தாசில்தார் அங்கேயே உயிரோடு எழுந்து போனார். அவரைக் காப்பாற்ற முயன்ற இருவருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டன.
ஹயத்நகர் மண்டலம் கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷுக்கு அதே கிராமத்தில் நிலம் உள்ளது . அதன் ரிஜிஸ்ட்ரேஷன் பற்றி பேசுவதற்கு திங்கள்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு எம்ஆர்ஓ ஆபீசுக்குச் சென்றார்.
சற்றைக்கெல்லாம் மதிய உணவு இடைவேளைக்கு செல்லவிருந்த விஜயாரெட்டி சுரேஷை உள்ளே அழைத்துப் பேசினார். சுமார் அரை மணிநேரம் பேசிய சுரேஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கதவை தாளிட்டுவிட்டு கையோடு எடுத்துச் சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ அவரையும் பிடித்துக் கொள்ளவே சுரேஷ் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார்.

எம்ஆர்ஓவின் கதறலைக் கேட்ட பிற உத்தியாகிகள் என்ன நடந்தது என்று வினவினார். ஷார்ட் சர்க்யூட்டால் தீ பிடித்ததாக கூறி விட்டு சுரேஷ் ஓடிப்போனார். சில வினாடிகளுக்குள் நெருப்பு பற்றி எரிய விஜயாரெட்டி வெளியில் ஓடி வந்தார் .
அவரை காப்பாற்றுவதற்கு கார் டிரைவரும் மற்றொருவரும் முயற்சித்தாலும் பலன் இல்லாமல் போனது. தீவிரமாக எரிந்து போனதால் எம்ஆர்ஓ அனைவரும் பார்த்திருக்கும் போது உயிரிழந்தார்.
மறுபுறம் குற்றவாளி சிறிது தூரம் ஓடியவர் கீழே விழுந்துவிட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுரேசை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
எம்ஆர்ஓ நிலத்தின் ரிஜிஸ்ட்ரேஷனை தாமதப்படுத்தியதால் சுரேஷ் அத்தகைய கொடூரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது . பாஸ்புக் விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. குற்றவாளியை சரியாக விசாரித்த பின் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர் .
‘ராச்சகொண்ட’ போலீஸ் கமிஷனர் மகேஷ் பகவத் மற்றும் ஜில்லா கலெக்டர் சம்பவ இடத்தை பரிசீலித்து விவரம் சேகரித்தனர். அமைச்சர் சபீதா ரெட்டி இந்த சம்பவத்தை தீவிரமாக கண்டித்தார்.
வருவாய் பணியாளர்கள்’ தாசில்தார் சங்க தலைவர்கள் அலுவலகங்களில் அரசு பணியாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.



