
தமிழகத்தில் திருச்சி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16234) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கு மாற்றாக திருச்சி-மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை இயங்கவிருக்கிறது . திருச்சியில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும் ரெயில் மயிலாடுதுறைக்கு மாலை 4.15 மணிக்கு போய் சேரும்