இன்னும் 2 நாட்களுக்கு கொளுத்தி எடுக்குமாம்!

சற்றுமுன் சென்னை தமிழகம்

Regional Meteorological Center 1 - 2026

உள் தமிழகத்தில் 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் 25-ஆம் தேதி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.