சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலகலமாக துவங்கிய IPL 2019 தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்து, 17.1 ஓவரில் 70 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்லில் நாளை (24.03.2019) மாலை 4 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளும், இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் மும்பை – டெல்லி அணிகள் மோத உள்ளன.