சேலம் 8 வழி சாலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
பசுமை வழி சாலை என்ற பெயரில் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில்தான் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.