பொம்மையின் தலை உடைப்பு! ஈவேரா.,வுக்கு அவமரியாதை என பகுத்தறிவாளர்கள் கொதிப்பு!

Published:

evr statue in aranthangi - 2026

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரம் ஈ.வே.ராமசாமி நாயக்கர் நினைவாக வைக்கப் பட்டிருந்த பொம்மையின் தலைப் பகுதியை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.

பொம்மையின் உடைந்த தலைப்பகுதி சாலையில் அருகே கீழே விழுந்து கிடந்துள்ளது. இது தி.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மிக விரைவாக விசாரணையை மேற்கொண்டனர்.

பெரியாரை இழிவு படுத்திய ஹெச்.ராஜாவை டெபாஸிட் இழக்க வைக்க வேண்டும் என்று காரைக்குடியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சொல்லிவிட்டுச் சென்ற நிலையில், அதே தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கியில் ஈவெரா சிலை தலை துண்டிக்கப் பட்டிருக்கிறது!

Related articles

Recent articles

spot_img