சென்னை: வேலூர் அருகே ஆற்காடு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டும், மூச்சுத்திணறலால் உயிரிழந்தது. ஆற்காட்டை அடுத்த சாம்பவசிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குட்டி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது இரண்டரை வயது மகன் தமிழரசன் இன்று காலை 8.30 மணி அளவில் வீட்டின் அருகே மூடப்படாமல் வைத்திருந்த ஆழ்குழாய்க் கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து ஆற்காடு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், பல மணி நேர போராட்டத்திற்கு பின் குழந்தையை மீட்டனர். பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கே சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்தது. மூச்சுத் திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari