பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவியர்கள் 93.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாணவர்கள் 88.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதத்தில் 95.37% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், தேர்ச்சி சதவீதத்தில் 95.15% பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
மேலும் இந்த தேர்வை எழுதிய மாற்று திறனாளிகளில் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




